மாயா மழைப்பெட்டி
சின்னதொரு கிராமத்தில் அருண் என்பவன் வாழ்ந்து வந்தான் . அவனுக்கு மழையில் விளையாடப் பிடிக்கும். ஆனால் அவன் கிராமத்தில் மழை மிகவும் குறைவாகவே பெய்தது. ஒருநாள், அவன் காட்டுக்குள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தபோது, ஒரு பழைய பெட்டியை கண்டான். அது பார்ப்பதற்க்கு அதிசய பெட்டியாய் இருந்தது . அந்த பெட்டியின் மேல் "மாயா மழைப்பெட்டி" என்று எழுதப்பட்டிருந்தது. அருண் ஆச்சரியத்துடன் அதைப் திறந்தான். உடனே வானத்தில் கரும் மேகங்கள் உருவாகி, மழை கொட்ட தொடங்கியது! கிராமத்தினர் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் பிரச்சனை வருவதை அருண் அறிய வில்லை ஆம் மழை தொடங்கி சுமார் மூன்று மணிநேரம் நிக்காமல் பெய்தது. தண்ணீர் ஊருக்குள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. கிராம மக்கள் அவதிபட்டனர். அருண் பயந்துவிட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் போது ஒரு யோசனை அவனுக்குள் வந்தது. அந்த பெட்டிக்குள் ஏதாவது இருக்குமா? என்று மழைப்பெட்டிக்குள் பார்த்தபோது, அதில் "நிறுத்தும் பொத்தான்" இருந்தது! உடனே அவன் அதை அழுத்தினான். அடுத்த நொடியில், மேகங்கள் விலகின, மழை நின்றது, ஊர் மீண்டும் வழக்கம்போல் ஆனது. ...