பூனை மற்றும் சிறிய மணி

 


ஒரு கிராமத்தில் பல எலிகள் இருந்தன. அவை எல்லாம் ஒரு பழைய வீட்டில் வசித்துவந்தன. அந்த வீட்டில் ஒரு பெரிய பூனையும் வசித்துவந்தது. பூனை எலிகளை பிடித்து உண்பதற்காக எப்போதும் சுற்றித் திரிந்தது கொண்டிருக்கும்.

எலிகள் அந்த பூனையை பார்த்து மிகவும் பயந்தன. அவை ஒன்று கூடி திட்டம் தீடியாது. “இந்த பூனை நம்மை பிடித்து சாப்பிடுகிறது. இதை எப்படி தடுக்கலாம்?” என்று ஒரு பெரிய எலி கேட்டது.


அப்போது ஒரு புத்திசாலி எலி சொன்னது:“

நாம் பூனையின் கழுத்தில் ஒரு மணி கட்டிவிடலாம். அப்போதுதான் அது எப்போது வரும் என்று நமக்கு தெரியும். ஒளிந்துக்கொள்ளலாம்!”


அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். ஆனால் ஒரு பெரிய எலி கேட்டது:
“ யார் பூனையின் கழுத்தில் மணி கட்டப் போகிறார்கள்?”


எலிகள் எல்லாம் அமைதியாக நின்றன. யாருக்கும் சொல்ல தெரியவில்லை.

பயன்படுத்தும் பாடம்:

 யாரும் ஒரு வேலை செய்ய சொல்லலாம், ஆனால் அதை செய்வது கடினம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

கொள்ளை மற்றும் பொலிஸ்

பொன்னியின் புதிய பயணம்

பேய் மரம்