பேய் மரம்
நிலவு நிறைந்த இரவு. அந்த கிராமத்தில் யாரும் அந்த பழைய ஆலமரத்திற்கருகே செல்ல மாட்டார்கள். காரணம்? அது ஒரு பேய் மரமாம்!
அந்த கிராமத்தில் அருண் என்பவன் இருந்தான். அவன் மிகவும் தைரியமானவன். "பேய்கள் உண்மையில் இருக்குமா?" என்ற கேள்வி அவனை எப்போதும் தூண்டியது. ஒரு நாள், நண்பர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, பேய் மரம் பற்றிய கதைகள் வந்தன. நண்பர்கள் அனைவரும் அந்த மரத்துக்கு அருகில் செல்ல பயந்துகொண்டு இருந்தார்கள். ஆனால் அருண், "நான் அங்கே போயி இருக்கா? இல்லையா? என்று பார்க்கிறேன்!" என்று முடிவெடுத்தான்.
அந்த இரவு, எல்லா வீடுகளின் விளக்குகள் அணைந்தவுடன், அருண் மெதுவாக அந்த மரத்தின் அருகில் சென்றான். சத்தமில்லா இரவு… புழுதியான பாதை… மரம் காற்றில் அசைந்து பயங்கரமான சத்ததம்.
அருண் அருகில் சென்றதும், ஒரு மரம் எதோ அசைவது போல் உணர்ந்தான். உள்ளூரில் கூறும் கதைகள் உண்மையா? அவன் அருகில் சென்று பார்த்தான். சில்லென ஒரு குளிர் அடித்தது. மரத்தடியில் உள்ள பெருங்குழியில் இருட்டாக காணப்பட்டது.
திடீரென… "அரூஉஉஉஉ" என ஒரு குரல் கேட்டது!அ
ருண் பின்னால் திரும்பி பார்க்கும் முன்பே, மரத்திலிருந்து ஒரு வெண்மையான கை அவனை பிடிக்க முயன்றது!
அவன் பயந்துகொண்டு ஓட ஆரம்பித்தான். ஆனால் அவன் காலில் எதோ பற்றிக் கொண்டது! மரம் அவனை பற்றிப்பிடித்தது போல உணர்ந்தான். பயத்தால் அவன் முழு சக்தியுடன் உதைத்துவிட்டு வீட்டிற்குள் ஓடினான்.
அடுத்த நாள் காலை, கிராமத்து மக்கள் அனைவரும் மரத்தருகே சென்றனர். அங்கே ஒரு பழைய வெள்ளை துண்டு கட்டப்பட்டிருந்தது. யாரோ ஒரு குழந்தை வேடமிட்டு மக்களை பயமுறுத்தியதாக தெரிந்தது!
அருண் சிரித்துவிட்டு, "பேய் இல்லை! ஆனா... பயம் இருக்கறவர்களுக்கு எதுவும் பேயாவே தெரியும்!" என்று சொன்னான்.
அந்த நாள் முதல், கிராமத்தார் அந்த மரத்தை கண்டு பயப்படுவதை நிறுத்திவிட்டார்கள். ஆனால்… அந்த மரம் இன்னும் இரவுகளில் ஓசை எழுப்புவதை யாரும் விளக்க முடியவில்லை...
நன்றி!!!





Comments
Post a Comment