மாயா வனம் (Maya Vanam – The Enchanted Forest)

 கதைச்சுருக்கம்:

விக்னேஷ் ஒரு சுறுசுறுப்பான 10 வயது சிறுவன். அவன் பாட்டியின் கிராமத்திற்கு பள்ளி விடுமுறையில் செல்வது வழக்கமாக வைத்திருப்பான் . பாட்டி எப்போதும் அவனுக்கு புதுமையான கதைகள் சொல்லுவது வழக்கம், குறிப்பாக "மாயா வனம்" என்ற மர்மமான காடு பற்றிய கதைகள்.

ஒருநாள், விக்னேஷ் கிராமத்தில் சுற்றித் திரிந்தபோது பழைய, உடைந்து கிடைக்கும் ஒரு வண்டியை பார்க்கிறான். அதில் ஒரு பிரம்மாண்டமான பழைய வரைபடம் கிடைக்கிறது. அதில் மாயா வனத்திற்கான வழி காட்டப்பட்டிருந்தது!

ஆர்வத்துடன், அவன் நண்பர்கள் மீனா, ரவி, மற்றும் பூபதி ஆகியோரை அழைத்து காட்டுகிறான் , அத்தனை பேரும் அந்த மர்மமான காட்டிற்குச் செல்ல முடிவு செய்கிறார்கள். ஆனால் மாயா வனம் சாதாரணமான காடு அல்ல. அங்கே பேசும் விலங்குகள், பறக்கும் மந்திரப்பூச்சிகள், மற்றும் தோற்றமளிக்கும் மரங்கள் உள்ளன!

குழந்தைகள் அந்த காட்டில் பயணிக்கும்போது, ஒரு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் – "கோபி" என்ற ஒரு சக்திவாய்ந்த மந்திரக்காரன் அந்த காட்டை கைப்பற்ற முயல்கிறான். அவன் அந்த இடத்திலுள்ள ஜீவசக்தியை உறிஞ்சி, தனக்கேன ஒரு மந்திர உலகம் உருவாக்க நினைக்கிறான்.

விக்னேஷ் மற்றும் அவன் நண்பர்கள் ஒரு நல்ல மந்திரவாதியானா "அருணகிரி முனிவர்" அவர்களை சந்திக்கிறார்கள். அவர் அவர்களுக்கு மந்திர நாற்காலி, பேசும் நரி, மற்றும் மறைந்திருக்கும் போர்கவசம் போன்ற வித்தியாசமான பொருட்களை கொடுக்கிறார்.

1. மந்திர நாற்காலி

இது சாதாரண நாற்காலி இல்லை! இது பறக்கக்கூடிய நாற்காலி.

இதில் அமர்ந்தால், அது போகவேண்டிய இடத்திற்கு பறந்து கொண்டு செல்லும்.

குழந்தைகள் ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டால், இது அவர்களை மீட்டுக் கொண்டு வரும்.


2. பேசும் நரி
ஒரு வல்லமை வாய்ந்த, புத்திசாலியான நரி குழந்தைகளுக்கு வழிகாட்டும்.
அது மனிதர்களைப் போல பேசும்!
அது சூழ்நிலைகளை சரியாக புரிந்து, அதற்கு தகுந்த யோசனைகளை சொல்வது இதன் சிறப்பாகும்.


3. மறைந்திருக்கும் போர்கவசம்

இது யாருடைய கண்களுக்கும் தெரியாதவனாக மாற்றும் போர்கவசம்.

இதை அணிந்தால், எதிரிகள் யாரும் நம்மழை பார்க்கமுடியாது முடியாது.
குழந்தைகள் கோபியை நேருக்கு நேர் எதிர்கொள்ள இதைப் பயன்படுத்துக
வார்கள்.
அதை வைத்து குழந்தைகள் கோபியின் திட்டத்தை வீழ்த்திக்கொண்டு, மாயா வனத்தை மீட்டெடுக்கிறார்களா? கோபி எதிர்த்து என்ன செய்யப்போகிறார்கள்?

இது விறுவிறுப்பான மாயாஜாலமும் சாகசங்களும் நிறைந்த ஒரு பயணம்!

இந்த கதை தொடரும்.....

Comments

Popular posts from this blog

கொள்ளை மற்றும் பொலிஸ்

பொன்னியின் புதிய பயணம்

பேய் மரம்